பள்ளி காலை வழிபாடுசெயல்பாடுகள்:

திருக்குறள்:

ஒழுக்கத்து நீத்தார் பெருமைவிழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

 

உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்றுபற்று விட்டவர்களின் பெருமையைச்சிறந்ததாக போற்றி கூறுவதேநூல்களின் துணிவாகும்.

பழமொழி :

A stitch in time saves nine

வருமுன் காத்தல் சாலவும் நன்று

 

பொன்மொழி:

இப்பொழுதே மகிழ்ச்சியாய்இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள்.இன்னும் துன்பங்கள் வரக்காத்திருக்கின்றன.

– பிரேண்டர்ஜான்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில்யாருடைய உடலுக்கும் மனதிற்கும்துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால்முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆசிரியராக இருந்து பின்னர்குடியரசு தலைவராக பொறுப்புவகித்தவர்

விடை: டாகடர் ராதாகிருஷணன்

2 மக்களவையின் பெரும்பாண்மைகட்சியின் தலைவர்

விடை: பிரதமர்

 

நீதிக்கதை :

நரியும் கொக்கும் | The Fox And The Stork – Short Story

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பலமிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்தகாட்டில் நரி ஒன்று வசித்து வந்தது.அதற்கு எப்போதும் யாரையாவதுஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக்கண்டு மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

 

  அதே காட்டில் அறிவு மிக்க கொக்குஒன்றும் இருந்ததது. அந்த கொக்குஅணைத்து மிருகங்களிடமும் நன்மதிப்பை பெற்று இருந்தது. இதைபொறுக்க முடியாத நயவஞ்சக நரிஅந்த கொக்கை எப்படியாவதுஏமாற்ற வேண்டும் என்றுநினைத்தது.

ஒரு நாள் கொக்கு நரியின் குகைஇருக்கும் வழியில்வந்துகொண்டிருந்தது

நரி அந்த கொக்கைப் பார்த்து”நண்பனே! உன்னுடைய அறிவைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.நான் நாளை உனக்கு ஒரு விருந்துவைக்க விரும்புகிறேன். உன்னால்வர முடியுமா?” என்று கேட்டது.

கொக்கும் சரி வருகிறேன் என்றுகூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப்ஒன்றை செய்தது.

அன்று மாலை கொக்கு நரியின்இடத்திற்கு சென்றது.

நரியோ திட்டமிட்டபடி, சூப்பைஅகன்ற இரு தட்டில் ஊற்றியது.ஒன்றை கொக்கிடம் கொடுத்தது.

கொக்கினால் வாய் அகன்ற தட்டில்உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை.

நரியோ நக்கி நக்கி அந்த சூப்பைகுடித்துவிட்டு, “நண்பனே இந்தசூப்பை உனக்காக செய்தேன் எப்படிஇருந்தது?” என்று சிரித்துகொண்டேகேட்டது.

 

கொக்கு ஏமாற்றப்பட்டதைஉணர்ந்தது. நரியிடம், “நண்பனேசூப் மிகவும் ருசியாக இருந்தது”என்று கூறியது .

கொக்கு நரியிடம், “இரவு நேரம் ஆகபோகிறது நான் செல்ல வேண்டும்”என்று கூறியது.

செல்லும்முன் “இன்று நீ எனக்குவிருந்து வைத்தாய்! பதிலுக்கு நான்நாளை உனக்கு விருந்துவைக்கலாம் என்று நினைக்கிறன்.உன்னால் வர முடியுமா?” என்றுகேட்டது.

நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன்என்ற கர்வத்துடன் சந்தோசமாகஉறங்க சென்றது. கொக்குபசியுடனும், வருத்ததுடனும் பறந்துசென்றது.

அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்லபாடம் புகட்ட வேண்டும் என்றுநினைத்தது.

பல இறைச்சிகளை போட்டு சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அதன்வாசனை அந்த காடு முழுவதும்பரவியது.

அன்று மாலை நரி கொக்கின்வீட்டுக்கு சென்றது. கொக்கு நரிவந்தவுடன், அந்த சுவை மிக்கசூப்பை சிறிய துளை கொண்டஇரண்டு குவளையில் ஊற்றியது.அந்த சூப்பின் வாசனயைமுகர்ந்தவுடன் நரிக்கு வாயில்எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்லவேட்டை என்று நரி நினைத்தது.

கொக்கு குவளையை நரியிடம்கொடுத்தது. கொக்கு தன் வாயைகுவளையில் நுழைத்து சூப்பைருசித்தது. நரியினால், துளைசிறியதாய் இருப்பதனால் குடிக்கமுடியவில்லை.

குவளையின் ஓரங்களில் சிதறிஇருந்த சிறு துளிகளை மட்டுமேநக்கி சாப்பிட முடிந்தது.

கொக்கு நரியைப் பார்த்து “சூப்எப்படி இருந்தது என்று கேட்டது?”நரியும், “மிகவும் அருமைஇதுபோன்ற ஒரு சூப்பை நான்குடித்ததே இல்லை” என்று பொய்சொல்லியது.

அப்போது தான் நரிஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றிஎன்று கூறிவிட்டு வருத்ததுடன்சென்றது.

அப்போது தான் நரி “நாம்மற்றவர்களை ஏமாற்றும் போதுஅவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டுஇருப்பார்கள்” என்று உணர்ந்தது.

அன்று முதல் திருந்திய நரி, பிறகுயாரையும் ஏமாற்றுவதில்லை.

 

இன்றைய செய்தி துளிகள் :

1.மத்திய அரசு ஊழியர்கள்சம்பளத்துடன் கூடிய விடுப்பில்வெளிநாடுகளுக்கு பயணிக்க புதியதிட்டம்: விரைவில் அறிமுகம்

2.டெல்லியில் ஏவுகணை தாக்குதல்தடுப்பு அமைப்பு: அமெரிக்காவிடம்இருந்து வாங்க இந்தியா திட்டம்

  3.இந்தியாவில் சாலை விபத்துகள்அதிகமாக நடைபெறும்மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

4.தனிப்பட்ட முறையில் பள்ளிகளைநடத்த முடியவில்லை என்றால்,அவற்றை மூடும் அதிகாரம்பள்ளிகளுக்கு இல்லை’ எனசி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார்பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன்பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தல்.

5.குஜராத் மாநிலத்தில் நடைபெற்றதேசிய இளையோர் தடகளபோட்டியில், தமிழக வீரர் கோகுல்தங்கப்பதக்கம் வென்று சாதனை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here