45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி

45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி முனைவர் மு.கனகலட்சுமி அவர்களால் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூர் ஆகிய இரண்டு ஒன்றிய ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியானது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என CEO அவர்கள் தெரிவித்தார்.

அன்புள்ள எனதருமை ஆசிரியர்களே!

 ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் கட்டாயம் வாங்கி பயன்படுத்த வேண்டிய நூல் ஆசிரியர் முனைவர் மு.கனகலெட்சுமி அவர்கள்   எழுதிய தமிழ்,கணிதம் எளிமையாக கற்பிப்பது எப்படி என்ற கையேடு தான்..

இவர் தன் முயற்சியால் பல ஆய்வுகளை மேற்கொண்டு தனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த  இரு நூலை எழுதியுள்ளார்..

 தொடக்க கல்வியை மாணவர்கள் படிக்கும் பொழுது தாங்களாகவே பிழையின்றி பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்..

தமிழ் எழுத்துகளை படிக்க ஓர் ஆண்டு ஆகும் என்ற நிலையினை மாற்றுவதற்காக எளிமையாக வடிவமைக்கப்பட்ட நூல்..

இக்கற்றல் முறையில் ஒரு நாள் 5 அல்லது 6 சொற்கள் வீதம் 45 மணித்துளிகள் கற்றால் போதுமானது.

45 நாட்களில் பிழையின்றி தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துகளையும் விரைவாக கற்கலாம் என கூறியுள்ளார். ..

மேலும் கணக்கு கையேட்டில் ஒன்றாம் வகுப்பிலேயே கணிதம் மிக எளிமையாக கற்பிப்பது எப்படி என்பதை ஆசிரியர்களுக்கும் ,கற்றுக் கொள்வது எப்படி என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்..

வகுப்பறையில் 2 வருடங்களில் எண்களைத் தெரிந்து கொண்ட மாணவன் விதி விளக்கு  முறையில் 39 நாட்களுக்குள் எண்களை தெரிந்து கொண்டு விடுகிறான்..

மேலும் ஆசிரியர் கனகலட்சுமி அவர்கள் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி…

 ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது.

இதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர்.

 வெளிமாநில தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார்,

 தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

 ஒன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தமிழ் எழுத்துகளை வாசிக்க வைத்துவிட்டால், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க முடியும் என்றும், கனகலட்சுமி உறுதிபட கூறுகிறார்.

அவரிடம் உரையாடியதில் இருந்து… : உங்கள் தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சி குறித்து…ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இந்த வயது கொண்டவர்கள். இதனால், ஒன்றாம் வகுப்பில் ஒரு குழந்தைக்கு, 45 நாட்களில் தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன்.

தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சியை தவிர, துவக்க பள்ளி மாணவர்களுக்காக வேறு ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறீர்களா?
எப்படி, 45 நாட்களில் ஒரு மாணவன் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமோ, அதேபோல, 38 நாட்களில் பூஜ்யம் முதல் 100 வரை, எண்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நிரூபிக்கும் வகையில், கணக்கு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

 வாய்ப்பாடு தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே, ஒரு மாணவன் தேர்வில் கணக்குகளை போடாமல் வந்துவிடக்கூடாது. இதற்காக எளிய முறையில் வாய்ப்பாடு கற்பிக்கும் முறை அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் ஆராய்ச்சி புத்தகங் களுக்கு, சக ஆசிரியர்களிடம் வரவேற்பு உள்ளதா?
என்னுடைய கற்பிக்கும் பயிற்சி முறையை, மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க, பள்ளி கல்வித்துறையில் இருந்து மாவட்ட வாரியாக சென்று, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

 இதுவரை விழுப்புரம், கடலூர் என பல்வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அம்மாவட்ட ஆசிரியர்கள் இந்த கற்பிக்கும் முறையை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

பல ஆசிரியர்கள் என்னுடைய புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த நீங்கள், அங்கிருந்து சென்னை மாநகராட்சி பள்ளிக்கு மாற்றலாகி வந்து பணிபுரிவதன் நோக்கம்?

சென்னையில் குடிசை பகுதிகள் அதிகமாக உள்ளன. இங்குள்ள குடிசை பகுதி மாணவர்களிடம், பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இம்மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்ட ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நான் பணிபுரியும் எழும்பூர் மாநகராட்சி துவக்க பள்ளியில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லை. ஒருநாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் மாணவர்கள் வருகின்றனர். ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவன் தமிழ் வாசிக்க பழகிவிட்டால், பள்ளி இடைநிற்றல் நிச்சயமாக இருக்காது.

துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

எந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாது. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்.ஆசிரியர்கள் பொறுமையாக இருந்து, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நம்மிடம் குழந்தைகள் அன்பாக பழகும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு ஆராய்ச்சியாளர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
எந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாது. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்…

கனகலட்சுமி, ஆசிரியை, தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்…

 மேலும் முனைவர் ஆசிரியர் மு.கனகலட்சுமி அவர்கள் எழுதிய  இக்கையேட்டினை பெற  விரும்புவர்கள்

தொடர்பு கொள்ள

முனியசாமி  புதுக்கோட்டை மாவட்டம்          9486861020
    
 வேலுர்  மாவட்டம்      

 ஹரிகரன் ,  9791324374

கல்விச்சிறகுகள் கார்த்திகேயன் 9843398567

 ராஜேஸ் விழுப்புரம் மாவட்டம்         9894245004

 கணபதி விழுப்புரம் மாவட்டம்          9600604037

தங்கராஜ் திருநெல்வேலி மாவட்டம்        7708455938

கண்ணன்   விருதுநகர் மாவட்டம்           8870759730    

 உலகநாதன் சென்னை மாவட்டம்  9884026406

ஆன்டணி கஸ்பார் திண்டுக்கல் மாவட்டம்  8098098574

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here