Scholarship பெற மாணவர்களை அழைக்கிறது தபால்துறை
கோவை:தபால்துறையின்,’தீன் தயாள்ஸ்பர்ஷ் யோஜனா’ திட்டத்தின்கீழ்ஊக்கத்தொகை பெற பள்ளிமாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.பள்ளிமாணவர்கள் மத்தியில் தபால்தலை சேகரிக்கும்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, ‘தீன தயாள் ஸ்பர்ஷ்
யோஜனா’ எனும் திட்டத்தை கடந்தநவ., மாதம் மத்திய அரசுஅறிமுகப்படுத்தியது. இதன்கீழ்மாதந்தோறும், 500 ரூபாய்ஊக்கத்தொகை வழங்கப்படும்நிலையில், இந்தாண்டுக்கானஊக்கத்தொகை திட்டத்தின் கீழ்பயன்பெற விரும்பும்மாணவர்களுக்குதபால்துறை அழைப்புவிடுத்துள்ளது.இதன்கீழ், அரசு மற்றும்அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறாம்வகுப்பு முதல் ஒன்பதாம்வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியர்விண்ணப்பிக்கலாம்.
60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினைசேர்ந்தவர்கள், 55 சதவீதம்மதிப்பெண் பெற்றிருந்தால்போதுமானது.விண்ணப்பிக்கும்மாணவர்களுக்கு முதல் கட்டமாக, வினாடி-வினா, எழுத்துத்தேர்வு ஆக.,18ம்தேதிநடத்தப்படும். வெற்றிபெற்றவர்கள் ஸ்டாம்ப் தொடர்பானஏதேனும் தலைப்பின் கீழ், ‘philately project’ சமர்ப்பிக்க வேண்டும். இதில்தேர்வு செய்யப்படும் 
மாணவர்களுக்கே மாதம், 500 ரூபாய்வீதம் ஆண்டுக்கு, 6 ஆயிரம்ரூபாய்அவர்களுடைய சேமிப்புகணக்கில் சேர்க்கப்படும்.தபால்துறைஅதிகாரி ஒருவர்கூறுகையில், ‘சேகரிப்பு கணக்கு துவங்க விரும்பும்பள்ளிகள் மற்றும் மாணவர்கள், தலைமை தபால் நிலையத்தைஅணுகலாம்.
அல்லது, 0422 2305100 எண்ணில்தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here