Educationtn.com

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!

அரசு பள்ளிகளில், நான்கேஆண்டுகளில் மாணவர்களின்எண்ணிக்கை 10 லட்சம்குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது. இது குறித்த

செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

10 ஆண்டுகள் முன்பு வரை, அரசுபள்ளிகளில் 90 லட்சம்மாணவர்களும், தனியார்பள்ளிகளில் 30 லட்சம்மாணவர்களும் படித்து வந்தனர்.இந்த நிலை தற்போது தலைகீழாகமாறியிருக்கிறது. அதுவும், கடந்தநான்கு ஆண்டுகளில், அரசுபள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை மிக கடுமையாகசரிந்திருக்கும் அதிர்ச்சித் தகவல்,சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டபுத்தகத்தின் மூலமாகவேவெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..

இதன்படி, 2014-15ல் அரசு ஆரம்ப,நடுநிலை, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில், 56லட்சத்து 55 ஆயிரத்து 628மாணவர்கள் படிப்பதாககூறப்பட்டது. இது, 2018 -19 ல் 46லட்சத்து, 60 ஆயிரத்து 965 ஆககுறைந்துள்ளது, கல்வியாளர்கள்மத்தியில் கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

நான்கே ஆண்டுகளில் அரசுபள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை 10 லட்சம்சரிந்திருக்கிறது.

இதேநேரத்தில், தனியார் பள்ளிமாணவர் எண்ணிக்கையைபொறுத்தவரை, 2014-15-ல், 45லட்சத்து 96 ஆயிரத்து 909 ஆகவும், 2018-19-ல் 52 லட்சத்து 71 ஆயிரத்து543 ஆக உள்ளதாகவும்தெரியவந்துள்ளது.

நகரங்களுக்கு புலம் பெயரும்மக்கள், தனியார் பள்ளிகளில்பிள்ளைகளை சேர்ப்பதே, அரசுபள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை சரிய முக்கியகாரணம் என கூறும், கல்வியாளர்அஜீத் பிரகாஷ் ஜெயின், தனியார்பள்ளிகளை போல், அரசு பள்ளிஆசிரியர்களுக்கும் நவீனமுறைகளில் பாடம் நடத்த பயிற்சிஅளித்தால், மாணவர்எண்ணிக்கை மேலும் சரியாமல்இருக்கும் என்கிறார்.

இலவச மற்றும் கட்டாய கல்விசட்டத்தின் கீழ், மாணவர்களைதனியார் பள்ளிகளுக்கு அனுப்பி,அவர்களுக்கான கட்டணத்தையும்அரசே கொடுக்கும் நிலைஇருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர்சங்க பிரதிநிதிகள், அதையும்தாண்டி, மாணவர்களை சேர்க்கஆசிரியர்களும் பல்வேறுமுயற்சிகளை எடுக்கிறோம் எனவும்தெரிவிக்கின்றனர்.

இதே நிலை இன்னும் சிலஆண்டுகளுக்கு நீடித்தால், அரசுபள்ளிகளே இல்லாத அபாய நிலைஉருவாகிவிடும் என்பதால், இந்தவிவகாரத்தில் அரசு கூடுதல்கவனம் செலுத்த வேண்டும்என்பதே கல்வியாளர்களின்வேண்டுகோள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here