கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..

ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி

பல்கலை ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது’ என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,.ராஜ்யசபாவில், இது பற்றி அவர் கூறியதாவது:
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. 
இந்த உத்தரவை எதிர்த்து, சிறப்பு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது, ஆகஸ்ட், ௧௩ல், விசாரணைக்கு வருகிறது.

இதனால், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி களில், ஆசிரியர் பணிகளுக்கான, அனைத்து நேர்காணல்களையும், நிறுத்தி வைத்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான, சரியான ஒதுக்கீட்டை பேணிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.அதை இழக்கவோ, மற்றவர்கள் அதைக் கலைக்கவோ அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here