டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட்
பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது

*தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து  ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

*அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது
*இவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் டேப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது. இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2  ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்

*இதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும்

*இப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும்

*வட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம். இந்த பயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும்

*2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்

*பின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்

*எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

*மேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here