பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க

பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க ‘WORKPLACE by Facebook’

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாகவும், ஆசிரியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணரவும், மேம்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக இந்தியாவிலேயே முன்மாதிரியாக Workplace எனும் இணையவழி பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது.*

*முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்பொழுது மாநிலம் முழுவதுமுள்ள மூன்று இலட்சம் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.*

*இதன் மூலமாக ஆசிரியர்கள் தங்களின் சிறந்த கல்வி உத்திகளையும், தொழில்நுட்ப பயன்பாடுகளையும் சக ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.*

*workplace அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நேரடியான தகவல் தொடர்புக்கு வழிசெய்யும்.*

*பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இணைய வழியாக நேரலையில் புதிய பாடத்திட்டத்திற்கான கற்பித்தல் செயல்பாடுகளை போதிக்கவும், நேரலையில் வகுப்பெடுக்கவும், இணைய வானொலி நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.*

*ஆசிரியர்கள் அவற்றை எந்த நேரத்திலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஏதுவாக அவை நேரலைக்குப் பிறகும் Cloud storage ல் சேமிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.*

*மேலும் ஆசிரியர்கள் தாங்களே உருவாக்கிய மின் பாடப்பொருள்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும், அவை குறித்த ஆரோக்கியமான விவாதத்திற்கும் ஒரு தளமாக இந்த Workplace விளங்கும்.*

*சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள், சிறந்த பள்ளிகளை அலுவலர்கள் கண்டறிந்து பாராட்டவும் இத்தளம் வழிசெய்யும்.*

*இத்தளத்தின் மூலமாக ஆசிரியர்கள் மின் பாடப்பொருள் தயாரிப்பு , போட்டித்தேர்வுகளுக்கான வினாக்கள் தயாரிப்பு ஆகியவற்றில் நேரடியாக தங்களின் பங்களிப்பை அளிக்க முடியும்.*

*மாநில அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ கான்பரன்ஸ் வசதிகளை Workplace மூலமாக மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டார அலுவலர்கள் பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டு உள்ளது.*

*இதற்கேற்றவாறு Cloud storage, 46 மொழிகளில் மொழிபெயர்பு வசதிகள், தகவல் பாதுகாப்பு வசதிகள், கைபேசி செயலி, குழுக்கள் உருவாக்கும் வசதி ஆகியவை இத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.*

*_Workplace ன் சிறப்பம்சங்கள்:_*

*அளவற்ற பயனாளிகள்,*
*அளவற்ற கோப்புகளை சேமிக்க Cloud space,*
*வீடியோ கான்பரன்ஸ் வசதி,*
*படங்கள், ஒலி/ஒளி கோப்புகளை பகிர்ந்துகொள்ளும் வசதி,*
*வரிசைமுறை விளக்கப்படம்,*
*மொழிபெயர்ப்பு வசதிகள்,*
*நேரலை ஒளிபரப்பு வசதி,*
*Android/ IOS செயலி.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here