வருமான வரி கணக்கு தாக்கல்: சிறப்பு உதவியாளர்களுக்கு ஏற்பாடு

சென்ற நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வோருக்கு உதவி புரிவதற்காக சிறப்பு உதவியாளர்களை சென்னை வருமான வரி அலுவலகம் நியமித்துள்ளது.


“Tax Return Preparer’ என்றழைக்கப்படும் சிறப்பு உதவியாளர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
இவர்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான உதவிகளை செய்து கொடுப்பர் என்று வருமான வரித் துறை அலுவலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: 

ஒருவர் வருமான வரி கணக்கை ஆன்-லைனிலோ, விண்ணப்பப்படிவத்தின் மூலமோ தாக்கல் செய்வதற்கான உதவி மற்றும் ஆலோசனைகளை இந்த சிறப்பு உதவியாளர்கள் வழங்குவர். 
தற்போது இப்பணியில் 10 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையெனில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். ஆன்-லைனில் வருமான வரி தாக்கல் செய்ய மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதார் மற்றும் பான் கார்டு எண், வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம்.
ஆன்-லைன் மற்றும் விண்ணப்பம் மூலம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய உதவிபுரிபவருக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவரின் கணக்குத் தாக்கல் விவரத்தைப் பொறுத்து இக்கட்டணம் வசூலிக்கப்படும். 

மேலும், வருமான வரிக் கணக்கை, கெடு தேதியான ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்வோருக்கு ஆண்டு வருமான அளவுக்கேற்ப தாமதத் தொகை வசூலிக்கப்படும் என்று வருமான வரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here