வரும் செப்டம்பர் மாதம்நடைபெறும் ஊரகத்திறனாய்வுத் தேர்வுக்கு,திண்டுக்கல் மாவட்டத்தில்தகுதி வாய்ந்த ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த

மாணவர்கள் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து திண்டுக்கல்மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்வெள்ளிக்கிழமைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல்மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் அரசுஅங்கீகாரம் பெற்றபள்ளிகளில் 2018-19 ஆம்கல்வியாண்டில் 9ஆம்வகுப்பு பயிலும்மாணவர்களுக்கு ஊரகத்திறனாய்வுத் தேர்வுநடைபெற உள்ளது.நகராட்சி மற்றும்மாநகராட்சிப் பகுதிகளில்படிக்கும் மாணவர்கள்இத்தேர்வுக்குவிண்ணப்பிக்க முடியாது.

ஊரகப் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களின்பெற்றோர் அல்லதுபாதுகாவலரின் ஆண்டுவருமானம் ரூ.1 லட்சத்துக்குமிகாமல் இருக்க வேண்டும்.அதற்கான சான்றிதழைவருவாய்த்துறையிடமிருந்து பெற்றுவிண்ணப்பத்துடன்இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை,தாங்கள் பயிலும்பள்ளியின்தலைமையாசிரியர் மூலம்மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ.5, சேவைக்கட்டணம் ரூ.5 என மொத்தம்ரூ.10த்துடன், பூர்த்தி செய்தவிண்ணப்பத்தினைதலைமையாசிரியரிடம்சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைஜூலை 25ஆம் தேதி வரைவழங்கலாம். அதற்குபின்னர் வரும்விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும்தேர்ந்தெடுக்கப்படும் 100மாணவர்களுக்கு (தலா 50மாணவர்கள் மற்றும்மாணவிகள்) 9 முதல் 12ஆம்வகுப்பு வரை கல்விஉதவித்தொகையாகஆண்டுக்கு ரூ.1000 வீதம்வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here