அரசு விளையாட்டு விடுதியில் சேர வாய்ப்பு

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, ஆர்வமுள்ள மாணவ – மாணவியர், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ – மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்காக, நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய, முதல்நிலை விளையாட்டு மைய விடுதிகள் நடத்தப்படுகின்றன.

இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ – மாணவியர், 2018 – -19க்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை, இன்று முதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்களை அணுகி பெறலாம். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேசிய, மாநில அளவில், வெற்றி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 18ம் தேதி காலை, 8:00 மணிக்குள், மாநில தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here