ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு: அமைச்சர் வலியுறுத்தல்
கோவை: தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2 ல் திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு குறித்து தமிழக அரசிற்கு கடிதம் வரவில்லை. இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணிநேரம், விடுமுறை நாட்களில் 3 மணிநேரம் நீட் பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here