உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான முழு நேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல் தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.2,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது நிறுவன வலைதளத்திலோ (‌w‌w‌w.‌u‌l​a‌k​a‌t‌h‌t‌h​a‌m‌i‌z‌h.‌o‌r‌g)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூலை 31 -ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 6 -ஆம் தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து வகுப்புகள் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி தொடங்கும்.
இதுகுறித்து மேலும் தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி அஞ்சல், சென்னை- 600 113 என்ற முகவரியிலும், 044- 2254 2992, 044- 2254 0087 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here