உதவித்தொகையுடன், கல்வெட்டு மற்றும் அகழாய்வில், முதுநிலை டிப்ளமா படிப்பு!!

உதவித்தொகையுடன், கல்வெட்டு மற்றும் அகழாய்வில், முதுநிலை டிப்ளமா படிப்புகளை, தமிழக தொல்லியல் துறை துவக்கி உள்ளது.இது குறித்து, தமிழக அரசு தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் கூறியதாவது:

தமிழ், சமஸ்கிருதம், தொன்மை வரலாறு, தொல்லியல் ஆகியவற்றில், முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, ஓராண்டு கால, தொல்லியல் அகழாய்வு மற்றும் கல்வெட்டில், டிப்ளமா படிப்புகளை, தமிழக அரசின் தொல்லியல் துறை துவக்கி உள்ளது.இதற்கான விண்ணப்பங்களில், பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு, 

ஆணையர், 
தொல்லியல் துறை, 
தமிழ் வளர்ச்சி வளாகம், 
தமிழ்ச்சாலை, 
எழும்பூர், 
சென்னை – 8′ 

என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், tnarch@tn.nic.in என்ற மின்னஞ்சலிலும், இம்மாதம், 16ம் தேதிக்குள் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here