சர்வதேச செஸ் போட்டி விழுப்புரத்தில் 12ல் துவக்கம்

விழுப்புரத்தில், சர்வதேச அளவிலான செஸ் போட்டி, வரும்,12ம் தேதி துவங்குகிறது.விழுப்புரத்தில் மாவட்ட சதுரங்க கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கவுரவத் தலைவர் சுப்புராமன் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், சர்வதேச அளவிலான, பிடேரேட்டிங் செஸ் போட்டி, விக்கிரவாண்டி சூரியா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், வரும் 12ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.போட்டியில், வயது வரம்பு இல்லை. 

முதல் பரிசு, 30 ஆயிரம் ரூபாய் உட்பட, மொத்தம், 2.40 லட்சம் ரூபாய்க்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. நுழைவு கட்டணம், 1,200 ரூபாய்.இதில், 7, 9, 11, 13 மற்றும் 15 வயதுள்ள மாணவர்களுக்கு, 10 பரிசுகளும்; மாணவியருக்கு, 10 பரிசுகளும்; ஊனமுற்றவர்கள், முதியவர் மற்றும் குறைந்த வயது மாணவ – மாணவியர் என, சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 

மேலும், தொடர்புக்கு: 94421 53420.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட சதுரங்க கழக கவுரவத் தலைவர், அர்ச்சனா குரூப்ஸ் சுப்புராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஓமன கிருஷ்ணன், பொதுச்செயலர் அப்சலோம், பொருளாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here