*05.07.2018*

*பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*

*திருக்குறள் :*

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்கள் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

*பழமொழி*

No Smoke without Fire

நெருப்பின்றி புகையாது.

*பொன்மொழி:*

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் மலராக இருக்கக்கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.

– அரிஸ்டாட்டில்

*இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*பொது அறிவு :*

1.ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் ?

1.609 கி.மீ

2.மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் எது ?

மைசூர்

*நீதிக்கதை*

அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கர்ணனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

*இன்றைய செய்தி துளிகள் : 05.07.2018*

1. நேபாளத்தில் கனமழையில் சிக்கிக்கொண்ட தமிழக பக்தர்களை பற்றி தகவல் அறிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவித் தேவைப்படுவோர் தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2. B.E. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஜூலை-6ல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

3.தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிக்கொண்ட இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

4. ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று நடந்த சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றது.

5. உலக்கோப்பை கால்பந்து போட்டி : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்.

*Today’s headlines*

*For the first time in India ,the data was collected during the 2021 census will be stored electronically,😊

*Chennai Metropolitan Development Authority will start work on documentation of 192 Heritage buildings this month💐

* vertical Garden now at Koyambedu metro station ,nearly 400 vases with 1250 plants cover 400 square feet

*Ex, Mexico Mayor has pledged to eradicate corruption

*Belgium rallies from 2-0 to break Japanese hearts.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நன்றி.மகிழ்ச்சி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here