திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார். 
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், காணொளிக்காட்சி மூலம், சி.இ.ஓ., ஜெயக்குமார் பேசியதாவது: பள்ளி வளாகத்தில், தினமும் இறைவணக்க கூட்டத்தில், பசுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும், ஜூலை, 31க்குள் முற்றிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஒரு லட்சம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை, பள்ளி முகப்பில் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here