பயோமெட்ரிக்” கொண்டு வருவதில் சிக்கல் – மாற்றாக Mobile App Attendance

 பள்ளிகளில் ‘பயோமெட்ரிக்’ முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க ‘சி.இ.ஓ., போர்டல்’ என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.

பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் ‘ஸ்மார்ட் போனில்’ பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.

அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு ‘டி.என்., அட்டனென்ஸ்’ என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.

 
மேலும் பாடப்புத்தகத்தில் ‘கியூ.ஆர்., கோடை’ ‘ஸ்கேன்’ செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் ‘கியூ.ஆர்., கோடை’ ‘ஸ்கேன்’ செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.

தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ஏற்கனேவே ‘எமிஸ்,’ ‘டீச்சர் புரைபைலில்’ சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,’ என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here