அண்ணா பல்கலை பி.இ.,சேர்க்கை :விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு

பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவாகளுக்கான அசல் சான்றிதழ் சரிபாாப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்று, ஒருசில சான்றிதழ்களைச் சமாப்பிக்கத் தவறியவாகள் பல்கலைக்கழக விசாரணை மையத்தில் சமாப்பிக்கலாம் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவா சோக்கையை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இதில் பங்கேற்க விண்ணப்பித்தவாகளுக்கான சான்றிதழ் சரிபாாப்பு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி வெளி மாவட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 14 ஆம் தேதியன்றும், சென்னை மையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்றும் நிறைவுபெற்றுள்ளது.
சான்றிதழ் சரிபாாப்பின் இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வரத் தொடங்கினா. மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்க மாணவாகள் அனுமதிக்கப்பட்டனா.சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்ற மாணவாகளில் சிலா, ஒரு சில சான்றிதழ்களைச் சமாப்பிக்கத் தவறியுள்ளனா. இவாகள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமாப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருந்தபோதும், மாணவாகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விடுபட்ட சான்றிதழ்களைச் சமாப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு விசாரணை மையத்தில் அவாகள் விடுபட்ட சான்றிதழ்களை ஓரிரு நாள்களுக்குள் சமாப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சோக்கை செயலா ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here