வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினாலும் செல்லும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ரோஹித் ஜாதவ் என்பவர் எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்திடம் ரூ.1.17 லட்சம் கடனாகப் பெற்று அந்தத் தொகையை திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார். கடனைத் திரும்ப பெற அவரது வீட்டு முகவரிக்குத் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பிய வங்கி அதிகாரிகள், அவரது செல்போன் எண்ணுக்கு பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப்பிலும் அனுப்பி வைத்துள்ளனர். இதனைப் பொருட்படுத்தாத ரோஹித் ஜாதவ் மீது எஸ்பிஐ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது, நான் வீடு மாறியதால் எனக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று ரோஹித் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பிய தகவல்களையும் அதனை அவர் படித்து பார்த்ததற்கான சாட்சியங்களையும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, “சட்டப்படி வழக்கு தொடர்பான நோட்டீஸ் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பப்படும். ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டும் நோட்டீஸ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே வாட்ஸ்அப்பில் லீகல் நோட்டீஸ் அனுப்புவதும் சட்டப்படி செல்லும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here