பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் 
விண்ணப்பிக்க இயலாத தனித்தேர்வர்கள், ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில்சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 1 வகுப்புக்கு சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது.

 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 முதலாமாண்டு பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

 தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்
சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 18, 19 ஆகிய நாள்களில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதியவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலின் நகலையும், தேர்வுக்கு வருகை தராதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here