DSE -MUTUAL TRANSFER APPLICATION FORM NEW

பதவி உயர்வுக்கு பின் பணிநிரவல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பட்டதாரிஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டபின்னர், பணிநிரவல்கலந்தாய்வு நடத்தவேண்டும், எனஆசிரியர்கள்

வலியுறுத்தியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியருக்கானபணிநிரவல் மற்றும்மாறுதல் கலந்தாய்வு, ஜூன்14 முதல்துவங்குகிறது.மாநிலஅளவில் 12,000க்கும் மேல்பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக (சர்பிளஸ்) ஆகஉள்ளனர்.எனவேபணிநிரவலுக்குபின் பொதுமாறுதல்நடந்தால் சில காலிஇடங்களே ஏற்படும்.

மேலும், பட்டதாரிஆசிரியரில் இருந்துஉயர்நிலை பள்ளிதலைமையாசிரியராகபதவி உயர்வு பெறுவதற்கு,இரண்டு ஆண்டுகளாகநீடித்த நீதிமன்ற தடைதற்போது விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 1200 ஆசிரியர்,தலைமையாசிரியராகபதவி உயர்வுபெறும்பட்சத்தில் பொதுமாறுதலில் அந்த 1200 காலிஇடங்களும்காண்பிக்கப்படும்.

இதுகுறித்து உயர்,மேல்நிலை பள்ளிதலைமையாசிரியர் கழகமதுரை மாவட்ட தலைவர்பாஸ்கரன் கூறியதாவது:பணிநிரவலுக்கு பின் பதவிஉயர்வு அளிக்கப்பட்டால்மீண்டும் 1200 காலிஇடங்கள் ஏற்படும்.இந்தஇடங்களை முறைகேடுமூலம் நிரப்ப வாய்ப்புஏற்படும். மேலும் இணைஇயக்குனர் – முதன்மைகல்வி அலுவலர் – மாவட்டகல்வி அலுவலர் என்றவரிசையில் பதவி உயர்வுஅளிக்கப்பட்ட பின்னர்,பொதுமாறுதல் கலந்தாய்வுநடத்தினால் மேலும்கூடுதல் காலியிடம்ஏற்படும். ஆனால் ஏனோதலைகீழ் வரிசையில்கலந்தாய்வு நடக்கிறது,என்றார்.

நடப்பாண்டு ஆசிரியர் -மாணவர் நிர்ணயம்,சென்ற ஆண்டு (1.8.2017) படிநிர்ணயிக்கப்பட்டதால்தான், உபரி ஆசிரியர்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. எனவே,இந்தாண்டு மாணவர்சேர்க்கை முடிந்த பின்,அதன் அடிப்படையில்உபரிஆசிரியர் கணக்கிடவேண்டும், எனஆசிரியர்சங்கங்கள்வலியுறுத்துகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here