மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை??

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து, மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் தேதி மற்றும் கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை என்பது குறித்த விபரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்பில் சேர தமிழக
மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 25 ம் தேதி முதல் துவங்கும். நாடு முழுவதும்ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.

முதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் ஜூலை 12 க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 2 ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 15 முதல் 26 வரை நடைபெறும்.

2 ம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 119 மதிப்பெண் எடுத்தால் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியாகும்.

 இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

 ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here