இன்றையநாள் (01.06.2018) புதிய கல்வியாண்டின் தொடக்கம்……

புதிய கனவுகளோடு…

புதிய எண்ணங்களோடு…

வருங்கால சமுதாயத்தை நான் உருவாக்கப்போகிறேன் என்னும் கர்வத்தோடு…

வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகளாய் இல்லாமல்,

வெளிச்சம் கொடுக்கும் விண்மீன்களாய் பிரகாசிப்போம்….

வாழ்த்துகள்……!

புதிய
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே….

மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே……

இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!

பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்கும் உரிமையாளர்கள்…
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..

உலகை வெற்றிகொள்ள
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்திகள்..

கடந்த கால
கசப்புகளில்
விழுந்து கிடக்காமல்

புதிய விடியலைத்தேடி
புறப்படுங்கள்

இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.

அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.

ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்

பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.

கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.

மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.

கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.

மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்

நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாம்
தோழனாக பார்க்கலாம்
நண்பனாக பார்க்கலாம்

கடமையில்
குறை வேண்டாம்

காலத்தில்
தாமதம் வேண்டாம்

கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.

நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.

இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாக
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறேன்

2018-2019ம் கல்வியாண்டு அனைவருக்கும்  இனிதாய் அமைய EducationTN.Com ன் வாழ்த்துக்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here