அரசுப்பள்ளியில் 1முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடமும் பாடபுத்தகமும்!

 

 அரசுப்பள்ளிகளில் 1முதல் 10ம் வகுப்பு வரை 6வது பாடமாக கணினி அறிவியல் பாடமும் கேரள மாநில அரசுப்பள்ளி பாடபுத்தகமும் தங்கள் அனைவரின் பார்வைக்கு,,,,

கணினிக் கல்வி பயின்றவர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் கேரளம்…
 
2016-2017ஆண்டு அறிக்கை:
 கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
1-ம் வகுப்பு
2-ஆம் வகுப்பு
3-ஆம் வகுப்பு

வெற்றிக் கதை!!!

கேரள அரசுப்பள்ளியின் கணினிக் கல்வி: 

அரசுப்பள்ளியில் குவியும் மாணவர்கள் சேர்க்கை!
2017-2018.

கேரள அரசாங்கத்தின் “பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கம்” என்ற முதன்மைத் திட்டம்தான் இத்தகைய மாற்றத்திற்கான காரணமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்றுவிப்புத்தரம் ஆகிய இரண்டையும் உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்துவதை இந்தஇயக்கம் இலக்காகக் கொண்டது. கடந்த ஆண்டில், வழக்கத்தை விட 1 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர்.அனைவரும் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்பது குறிபிடத்தக்கது.

2018-2019ம் கல்வி ஆண்டில்:இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப்பள்ளியை நோக்கி !

நடப்பாண்டைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது இரண்டு லட்சம் அதிக மாணவர்கள் என்பதையும் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 45 ஆயிரம் வகுப்பறைகள் உயர்தர தொழில்நுட்பம் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வேலைகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், இதன் பலன்களைஅனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
4-ஆம் வகுப்பு
5-ஆம் வகுப்பு

கேரளம் கணினி கல்வியில் வழங்கு வதிலும் முதலிடம்:

 கேரள அரசு கணினி கல்வியும் ,கணினி வழிக்கல்வியும் வழங்கி வருகின்றது.2011-2012ஆம் ஆண்டில்   தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகமானது அதில் 6-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரப்பட்டது. அந்த திட்டமும் ஆச்சி மாற்றத்தில்  கானல் நீரானது அச்சிடப்பட்ட புத்தகமோ குப்பை தொட்டியில் உருங்கும் நிலையை உருவாக்கிவிட்டது அரசு.அதற்கு பின் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்த கேரள அரசு இன்று இந்தியா அளவில் கணினி அறிவியல் கல்வி வழங்குவதில் முதல் மாநிலமாக உள்ளது.
6-ஆம் வகுப்பு

 

2018 ஆண்டு மத்திய அரசு தகவல்:
கேரள அரசுப்பள்ளியில் 70.19%கணினிகள் உள்ளன.

தமிழக அரசு!

36 இலட்சம் மாணவர்களுக்கு  மடிக்கணினியை இலவசமாக வழங்கிய தமிழக அரசு !

   கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம்    மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது இதுவரை 36 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளது .
 “ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785″  ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.

“பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??
தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100%  அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.
7-ஆம் வகுப்பு
8-ஆம் வகுப்பு
9-ஆம் வகுப்பு

பத்தாம் வகுப்பில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

 கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிான அந்திர தெலுங்கான கர்நாடக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால்,இன்று வரை  தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை இன்றுவரை

10-ஆம் வகுப்பு
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புத்தகம்

கணினியும் அதற்கான ஆசிரியர்களும் இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு!!


தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் கூட பொய்த்து போனது! புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஏமாற்றம்.!!!

        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 1, 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது     மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது தமிழக அரசு.
#savetngovtshools 

#savetncsteacherslife 
#savetngovtstudent 

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here